புதிய விடியல்: 1987. நாகராஜன் திருப்பூரிலிருந்து சென்னை வந்திருந்தார். அவரும், பத்து நண்பர்களும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குப் போனார்கள். வாயிற்காப்பாளர் அவர்களை நிறுத்தினார். “நீங்கள் ஹோட்டலுக்குள் போக முடியாது.” “ஏன்?” “பான்ட் சட்டை போட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்பது எங்கள் ஹோட்டல் விதிமுறை.” நாகராஜன் மட்டும் வேட்டி கட்டி யிருந்தார். […]