நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான்
உன் வருகை என் வசந்த காலம் .
அந்த நேரம்
கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும்
பேனா மையும் தீர்ந்துபோகும்
ஆனாலும்
என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை ...!
தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் ...
பிற மொழிகளைக் கற்க ஆசை
எனது எண்ணங்களை எழுதிவிட ....