சித்த மருத்துவம் Archives - Puthiya Vidiyal
250
archive,tag,tag-250,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-16.9,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.7.0,vc_responsive
HEALTH & FITNESS / 31.01.2019

கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை "காமாலா" என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய்.

பெயருக்கேற்றபடி, சரீரம், கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும்.
உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை மண்ணீரல், ரத்தத்திலிருந்து பழைய, சிதைந்து போன சிவப்பணுக்களை வெளியேற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும். இந்த நிகழ்வின் போது, ஹீமோகுளோபின் (ரத்த ஆக்சிஜனை உட்கொண்டிருக்கும்) சிதைந்து, கரும்பச்சை - மஞ்சள் நிறமான, வர்ணம் கொடுக்கும் பொருளான பிலிரூபின் (Bilirubin) ஆக மாறும். இந்த பிலிரூபின் ரத்தம் வழியாக கல்லீரலை சென்றடையும். இங்கு 'பிலிரூபின்', பித்த நீரின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, பித்த நீருடன் சிறுகுடலுக்கு போகும். இந்த பிலிரூபின் பித்த நீரை சேர முடியாமல் போனால், ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அதிக பிலிரூபின் தோலில் படிந்து மஞ்சள் நிறத்தை கொடுத்து, காமாலையை தோற்றுவிக்கிறது.

HEALTH & FITNESS / 31.01.2019

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் - "அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்"? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.

சித்தரத்தை

சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் -  Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.