தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல்

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.

சித்தரத்தை

சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் –  Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

பொது குணங்கள் – கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை குறைக்க வழி ஏற்படுத்தும். பசியை தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த வைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
சித்தரத்தை Bronchioles எனப்படும் நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. பைலோ கார்பின் என்னும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி ஆஸ்துமா போன்றதொரு நிலையை ஏற்படுத்திய சில விலங்குகளுக்கு சித்தரத்தை டிங்க்சர் (Tincture of  A.Galanga) சிறு அளவில் கொடுக்கப் பட்டதும் மூச்சிழுப்பு (ஆஸ்த்துமா) சீரைடந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.
சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். (Breath refresher). இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

பிற உபயோகங்கள்

சித்தரத்தை அரிப்பு, வீக்கம், பல் நோய், போன்றவற்றிக்கும் நல்லது.ருமாடிஸம், ஜூரம் போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டு மென்றால், தொண்டையில் கட்டும் கோழை, வாந்தி, இருமல் தணியும்.

Thanks Ayurveda today – Monthly Magazine

சித்த மருத்துவம் – புதிய விடியல்

Leave a Comment

Scroll to Top