Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

புதிய விடியல் : ஒவ்வொருநாளின் முதல் அரைமணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை நாம் எவ்வாறு அமைத்துக்கொள்கின்றோமோ, அந்தநாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒரு நாள் வெற்றிகரமானதாகவோ அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாகவோ இருப்பது என்பது நம் அணுகுமுறையைப் ( attitude matters)  பொறுத்தது.

வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதைகணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்துவந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமேபோதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன்கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலிநிறைந்தது. […]