வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதைகணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்துவந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமேபோதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன்கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலிநிறைந்தது. ஆனால் ஒரே இடத்தில் தேங்கி நின்று நம் வாழ்வின் பலநாட்களை வீணடித்த வலியைவிட மாற்றத்திற்காக நாம் பெறும் வலி ஒன்றும்பெரிதல்ல.
சிறிய சிறிய இலக்குகளை நாம் அடையும்போது நம் தன்னம்பிக்கைஅதிகரிக்கும். தொடர்ந்து முன்னேறுவோம். பெரிய செயல்களை செய்யும் முன்னர் ஏற்படும் தோல்வி பற்றிய பயங்களை உதறுவோம். நாம் இப்பொழுது முன்பைவிட வலிமையானவர்கள். நம்மால் நமது வெற்றி இலக்கை அடைய முடியும். தொடர்ந்து முன்னேறுவோம்.
மாற்றத்திற்கான தேடலில் நாம் ஈடுபடும்போது, நம்மை அறியாமலே நமக்குள் நல்ல ரசனைத் தன்மையும், ஒவ்வொரு விசயத்தையும் மாறுபட்டகோணத்தில் அணுகும் விதமும் அதிகரிப்பதையும் உணர முடியும். தினமும்செல்லும்...