HEALTH & FITNESS / 01.02.2019
உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம்
புதிய விடியல்: உடல் சூடு குறைய ஆயிர்வேதம் எளிய வழி. சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்கள். உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு.
உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.