கல்லூரிக் காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு

அந்த கடைசி நாள் 
==================
கனவுகள் நிறைந்த கண்களுடன் 
தயக்கத்துடன் கல்லூரியில் நான் 
கால்பதித்த அந்த முதல் நாள் ….
சின்னதான ஒரு அறிமுகம் ..
பெரிய எதிர்பார்ப்பு ..
பெரிய நண்பர்கள் வட்டம் ,
ஒவ்வொரு மாலையும் கிரிகெட்
விளையாடி களைப்புடன் வீடு சென்ற 
அந்த இன்பமான நாட்கள் ……!
சுதந்திரதின நாளில் நான் வாங்கிய 
அந்த முதல் பரிசும் அதனால் 
எனக்கு அறிமுகமான நண்பர்களுடனும்
இளநிலையின்  இறுதிநாளில் கண்ணீருடன் விடைபெற்றோம் .

மீண்டும் அதே கல்லூரியில் 
தொடருவோம் என தெரியாமலே ….. !

இந்தமுறை மீண்டும் அருமையான 
ஒரு நண்பர்கள் வட்டம் 
எத்தனையோ இனிமையான 
நினைவுகளையும்  சில துன்பமான 
சம்பவங்களையும்  உடனே சுமந்த 
இந்த கடந்த காலம் கண்டிப்பாக 
ஒரு பசுமையான நினைவுகளின் தொகுப்பு …
கல்லூரி வாழ்க்கையின் இறுதிநாளில் 
நண்பர்கள் குறைவாகவே பேசினார்கள் ..
ஆம் .. அவர்களிடம் தன் சொந்தக் குறிக்கோளைப் 
பற்றிய எண்ணம் மிகுதியாக இருந்தது 
தெரிந்தது … அதுதான் சரியானது ….

ஆம்….

வாழ்க்கையின் போக்கில் மீண்டும் 
ஒருநாள் அனைவரும் சந்திக்கலாம் …..!
அன்று இதே பழைய நினைவுகள் 
எங்கள் இதயத்தை விட்டு நீங்காமல் இருக்கும் …..!

நேரில் இருக்கும் போது
மகிழ்வுடன் இருந்தாலும் , பிரிவின்போது 
என் கண்களில் லேசான நீர் ததும்பியது…!
அது சோகத்தினால் அல்ல …..!
தொலைவால் பிரிந்தாலும் உணர்வினால் 
மிகவும் நெருங்கிய நினைவுகள் 
ஒன்று சேர்ந்த அந்த கடைசிக் கல்லூரி நாள்  நினைவுகளுடன்  
[written on 27.09.2006] Wednesday

Leave a Comment

Scroll to Top