அடுத்த 90 நாட்கள் – புதிய இலக்குகள் – புதிய பாதை -புதிய விடியல்

ஒவ்வொரு நாளின் முதல் அரை மணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை எவ்வாறு நாம் அமைத்துக் கொள்கிறோம் அந்த நாளில் நம் செயல்பாடு அவ்வாறே  அமைகின்றது. ஒருநாள் வெற்றிகரமானதாக அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாக இருப்பது என்பது நம் அணுகுமுறையை பொறுத்தது .

 வாழ்வில் நல்ல மாற்றத்தை விரும்புபவர்கள் அடுத்த 90 நாட்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அதனை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் அன்றைய நாளின் இலக்குகளையும் , முடிவில் அன்றைய செயல்பாடுகளை ஆராய்ந்து எங்கே நாம்  தவறு செய்கின்றோம் என்று உணர்ந்து அதனை சரி செய்தால் வெற்றிக்கான இலக்கின்  பாதையில் விரைவாக பயணம் செய்யலாம்.

சிறிய சிறிய இலக்குகளில்  நாம் வெற்றி பெறுவது நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். 90 நாட்களில் நமது எண்ணங்கள் செயலாக மாறி வெற்றிகரமானதாக அமைவதோடு அடுத்த இலக்குகளை நிணயித்திருப்போம் . வெற்றி என்பது தொடர்கதையாக  அமையும். அதனை சுவாரசியமாக வாசிக்க தயாராவோம் நண்பர்களே …!

Leave a Comment

Scroll to Top