கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு – 2

நானும் ஒரு பருவ காலக் கவிஞன்தான்  
உன் வருகை என் வசந்த காலம் .
                                      அந்த நேரம் 
கவிதை என்ற பெயரில் சிலபக்கங்களும்  
பேனா மையும் தீர்ந்துபோகும்
                                      ஆனாலும் 
என் உணர்வுகளை எழுத முடிந்ததில்லை …!
தமிழில் வார்த்தைகள் பற்றாகுரைபோலும் …
பிற மொழிகளைக் கற்க ஆசை   
எனது எண்ணங்களை எழுதிவிட ….

கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு – 3

இதே நாள் ….
வரலாற்றின் பக்கங்களுக்கு வரிகளாக அமையும் .
இதே நாள்தான் ,
நான் என்னை வெளிப்படுத்த விரும்பியது ,
என் நீண்ட பாதையில் நான் எடுத்து வைத்த
பிஞ்சு நடை தொடங்கியது …..
என்றாவது ஒருநாள் இது நடக்கும் 
என்று ஏங்கியது துவங்கியது இன்று …
இனியும் அமைதி என்பது 
என்னை மறப்பதும் , மறைப்பதுமல்ல ..
தூங்கி எழுந்தவுடன் மறைந்துபோகும் 
கனவுகள் அல்ல எனது இலட்சியங்கள் ..
என் ஒவ்வொரு அனுவிலும்
உயிர் பெற்று கருவாகி 
கனிந்தது ……….
ஒவ்வொரு புதிய விடியலும் புதிய
அனுபவம் , ஆம் ……
அன்று இறைவனின் திரும்பப் பெற 
இயலாத கணங்கள் எனக்காக 
காத்திருக்கும் ..
கருவில் உருவாகும் குழந்தையைப் 
போல் ஒவ்வொன்றாக உருப்பெற்று 
உயிர் பெற்றது என் ஆன்மா ………!
நாளை விதியின் வீதியில் வீசி 
எறியும் குப்பை அல்ல நான் 
தேவையில்லாத எண்ணக் குப்பைகளை 
தூய்மைப்படுத்த வந்தேன் இன்று ….!
ஆம் ..
என் நீண்ட தவம் கலைந்தது இன்று ..
இனி வாங்க வேண்டியது
வரம் மட்டுமே …
இதே நாள் …
என் மெளனம் கலைந்து மனம் 
திறந்த இனிய வேளையில் …
[written on 05.03.2006]

நானும் நாளையும் 
==================

எனது ஒவ்வொரு நாளும் 
நாளைய செய்தியை உள்ளடக்கியதே…
இன்றுமுதல் என்ற வார்த்தையை 
தவறாக நினைத்ததுண்டு……..!
கடந்த கால என் நினைவுகள் 
நாளை என்ற சோம்பேறித்தனத்தால் 
மட்டுமே நிறைந்தது …
மீண்டும் ஒருநாள் நான்
என் கனவுகளைப் புதுபிக்க
முயன்றேன் அதுவும் 
நாளைமுதல் தான்  நடைபெற 
முடிவு செய்தேன் ….!
இதைப் படிபவர்களுக்கு இது புரியாது …!
என்றாலும் நான் அறிவேன் 
என்ன என்று 
[written on 11.10.2006 Wednesday]

Leave a Comment

Scroll to Top