பொன்னியின் செல்வன் … புத்தக விமர்சனம் (வியப்பு)

வாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ….. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.

ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த புத்தகம் 2300 பக்கங்களைக் உள்ளடக்கியது.வீராணம் ஏரியில் துவங்கும் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில்   ஆரம்பித்து  கடைசிவரை காட்சிகளை கண்முன் கொண்டுவந்து ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருகிறார் ஆசிரியர். அன்றைய சோழ நாட்டின் இயற்கை வளம், மக்கள் வழக்கை முறை, நகர அமைப்பு , அரசர்களின் வீரம்,குடிமக்களின் அரச விசுவாசம்,  ஆன்மீகப் பணியில் அவர்களின் ஈடுபாடு, பெண்களின் உயர்ந்த நிலை போன்றவை பிரமிக்க வைக்கின்றன.( சற்று பொறாமையும் ஏற்படுகிறது,நாட்டின் இப்போதைய  நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுவது இயற்கையே.) – 

Leave a Comment

Scroll to Top