அத்வானி – புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்

சமிபத்தில் படித்த புத்தகம். இந்திய அரசியலில்  தவிர்க்க முடியாத நபர். தேசத்தின் முதல் தேர்தல் ஆரம்பித்து கடைசி லோக்சபா தேர்தல் வரை இவருடைய பங்களிப்பு உண்டு.

1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடிப்பில் ஆரபிகிறது புத்தகம். மசூதியை இடிக்கும் கரசேவர்களை அமைதியாக இருக்க இவர் சொல்ல சொல்ல இடிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் [பிரிட்டிஷ் இந்திய ] தொடங்கும் இவரது வழக்கை முழுவதும் தேசத்தின் வரலாறோடு ஒட்டி பயணிக்கிறது.

இரத்ததிற்கு அவரரவர் விருப்பதிற்கு பெயர் வைக்கலாம் என்றால் அத்வானி தயக்கமின்றி R.S.S positive என்று சொல்வார் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதுதான் உண்மை.படிபடியாக நடக்கும் ஜனசங்க தோற்றம் , வாஜ்பாய் உடனான நட்பு , எமர்ஜென்சி சிறை , ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் மொராஜிதேசாயுடன்  இணைந்து ஜனதா கட்சியில் பணியாற்றியது .பின்னர் அவர் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக ப.ஜ.க வை உருவாக்கிய கதை பிரமிக்கிறது … இந்தியாவின் அரசியலை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். ஆனால் நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளளது.

Leave a Comment

Scroll to Top