எனது எண்ண ஓட்டங்கள்: வாழ்க்கையின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் எங்கே இருகின்றோம்னு பார்க்கையில், எல்லோருக்கும் நல்லவனாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையபேரிடம் மனக்கசப்பை அளித்துள்ளதை அறியமுடிகிறது. நல்லது கெட்டது என்ற இரண்டும் இன்று அவரவர் நலனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். ஒன்று மட்டும் நிச்சயம் கழிவறையைச் சுத்தம் செய்யும் தொழிலானாலும் என்னைவிட யாராலும் சுத்தம் செய்யமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அர்பணிப்பு உணர்வோடு உழைக்கும் தன்மை நிச்சயமாக பெரிய மாற்றத்தையும், உயர்வையும் கொடுக்கும்.
அதுக்கு மனசுல இருக்குற குப்பைகளையும் தேவையில்லாத எண்ணங்களையும் மூட்டை கட்டிகடாசனும். கண்ணை மூடிக்கொண்டு காற்றடிக்கும் திசையில் சென்று கொண்டிருக்கும்போது என்றாவது ஒரு நாள் பழையதை நினைத்து நாம் நம் செயல்பாடுகளை ஆராயும்போது பல நல்லவர்களையும் அவர்களது இருப்பையும் தெரிந்துகொள்வதைப் போலவே அருகில் இருந்து குழி பறித்தவர்களையும் அடையாளம் காணுவோம். அதனையே நினைத்து மனம் வெதும்புவதை விட்டு அடுத்த இலக்கை நோக்கி விரையும் போது முழுமையாக மனதை செலுத்தி செயல்படும்போது மாற்றம் உண்டாகும் ஏமாற்றம் இருக்காது….
புதிய விடியல் : Date – 11.02.2014 Coimbatore