சாரதி.!- கண்ணன் வழி நடப்போம்.

அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான்.ஆனால்,சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலை யாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்… அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, “அய்யோ மகனே!” என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான். இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று “அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே” என்று சொல்லி அழுதபோது,

கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம் –
“நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்?அவனது குருநாதர் “சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்” என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது.பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான்.பிறகு உங்களின் தாய் குந்தி, “போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை” எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள்.பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது.

போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தா இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, “நான் கொன்றேன் நான் கொன்றேன்” என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?” என்று பார்த்தன் கூறினான் அர்ஜுனனிடம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு மட்டும் சாரதி இல்லை .. இந்த பாரத தேசத்திற்கும் அவன் தான் சாரதி….கண்ணன் வழி நடப்போம்.

Leave a Comment

Scroll to Top