கோவில் திருப்பணி – பொக்கிஷங்கள்

நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.

சேண்ட் பிளாஸ்டிங் மூலமோ, இல்லை பிற பணிகள் மூலமோ கோயிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாகத் தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

கோயிலின் தொன்மையான தூண்கள், சுவர் கற்கள், சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதைக் கண்டால் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

கோயிலின் கருவறையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக் கூடாது. கோயிலின் கருவறைகளின் நீள- அகல- உயரங்களை மாற்றம் செய்யக் கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.

செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை- கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோயிலில் பயன்படுத்தக் கூடாது. நாட்டுப் பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Leave a Comment

Scroll to Top