Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

Thamilselvan Subramaniam

புதியவிடியல் உதயம்..!

மாற்றத்திற்கான தேடலில் நாம் ஈடுபடும்போது, நம்மை அறியாமலே நமக்குள் நல்ல ரசனைதன்மையும், ஒவ்வொரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகும் விதமும் அதிகரிப்பதையும் உணர முடியும். தினமும் செல்லும் பாதையில் அன்றாடம் பார்த்தவற்றையே மிக உன்னிப்பாக பார்க்க ஆரம்பிப்போம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றையும் அதன் காரண காரியங்களோடு அறிய முற்படுவோம். இதற்கு முன்  ஏன் இதை பற்றி நாம் யோசிக்கவில்லை என்று நினைப்போம்.

அதன் பின் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள முயலுவோம். குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைவோம்.  நன்கு புரிந்து கொண்டு,  பின் எதனையும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப மிக சுருக்கமாக எளிமையாகவே அல்லது மிகவும் விரிவான ஒரு குழு விவாதமாகவோ  நம்மால் எளிதாக கையாள முடியும். கேள்விகளை விரும்பி எதிர்கொள்வதோடு சுவாரசியமாகவும் பதிலளிக்கலாம் தன்னம்பிக்கையோடு…!

நமது பிறப்பின் நோக்கம் என்ன என்று அறிந்துகொள்ள முயலும் போது, நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்வோம். அதன்பின் அந்த நோக்கத்தை அடைய நம்மில் உள்ள திறமை என்ன என்பதை அறிவதோடு, நம்மை தடுத்து நிறுத்தும் தடைகள் என்ன என்பதை ஆராய வேண்டும். அவற்றை தகர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

நம்முடன் இருப்பவர்கள் நமது நோக்கங்களை கேலி செய்யலாம். அதன் விளைவாக ஏற்படுபவற்றை பூதாகரமாக சொல்லி பயமுறுத்தலாம்.  அவற்றை நாம் நாசுக்காக புறக்கணித்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.  கையில் பணம் இல்லையே, உதவி செய்ய யாருமே இல்லையே என்று ஒதுங்கி விடாமல் நமது இலக்கினை அடைய என்ன தேவையோ அதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால் வாழ்வின் உச்சம் தொடலாம். நம்மை அறிவோம், முயற்சி செய்வோம் தொடர்ந்து சிகரம் தொட…! அனைவருக்கும் இனிய தீபஒளிதிருநாள் வாழ்த்துகள்.

தமிழ்ச்செல்வன்

.

Leave a Reply