இனியொரு விதி செய்வோம்
-
யானையின் தமிழ்ப்பெயர்கள்
யானையின் தமிழ்ப்பெயர்கள்: உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. தாய்மொழியை நேசிப்போம்.
-
உடல் சூடு குறைய எளிய வழி – ஆயிர்வேதம்
புதிய விடியல்: உடல் சூடு குறைய ஆயிர்வேதம் எளிய வழி. சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை ‘உடற்காங்கை’ என்பார்கள். உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு. உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள்,…
-
பித்தம் ஏற்படுத்தும் மஞ்சள் காமாலை – சித்த மருத்துவம்
கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை “காமாலா” என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய். பெயருக்கேற்றபடி, சரீரம், கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும்.உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை மண்ணீரல்,…
-
தீராத கபம் தீர சித்தரத்தை – சித்த மருத்துவம் – புதிய விடியல்
பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும். சித்தரத்தை சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் – Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.
-
ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் – புதிய விடியல்
புதிய விடியல் : தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமஸ்கிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.