Puthiya Vidiyal

இனியொரு விதி செய்வோம்

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்

புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்…! நட்பு

ஷார்ஜாவிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பே அலைபேசியில் அழைத்திருந்த ranjith நண்பர்களுக்கு அவனது திருமணஅழைப்பிதழ் கொடுக்க என்னையும் உடன் வர அழைத்திருந்தான்.

என் வீட்டிற்கு முதன்முறையாக வருவதால் அலைபேசியில் என் வீட்டிற்கு வழி சொல்லியவாரே வீட்டின் அருகில் இருந்த சாலை ஓரம் காத்திருந்தேன். டேய் மச்சான் நான் கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன் உன்னை பார்த்ததும் கையசைப்பேன் என்னை அடையாளம் கண்டுக்கோனு சொன்னான். நல்ல அய்யர் வீட்டு பையன் மாதுரி மீசையெல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாச கழட்டிட்டு சரியாக நான் நிற்கும் இடத்திற்கே இரு சக்கர வாகனத்தில் வந்து நின்றவன் சொன்னது ” டே நியாயப்படி நீதான் என்ன பார்த்து கையாட்டி அடையாளம் சொல்லியிருக்கணும் நீதான் அவ்வளவு வெயிட் போட்டுட்டே. உன்னை பார்த்தாதான் எனக்கும் அடையலாம் தெரியலைன்னு …………….!(இந்த அவமானம் உனக்கு தேவையா தமிழு……?). இப்ப திருமணம் முடிஞ்சு ஷார்ஜா திரும்பிட்டான். மவனே அடுத்ததடவ நீ இந்தியா வரும்போது பார்க்கலாம் யாரைப்பார்த்தா அடையாளம் கண்டு பிடிக்கறது கஷ்டம்னு. புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்…!

Leave a Reply