வறட்சியைக் குறைக்க வேண்டுமா? – வெள்ளரி பழம் நன்மைகள்

வெள்ளரி பழம் நன்மைகள்: வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது அவசியம்.

* வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு.

* இவற்றை விட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. செரிமானம் தீவிரமாகும்.

* பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விஷேச ஜீரண நீர் சுரக்கிறது. இது பித்தத்தை குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களை விரட்ட வெள்ளரி மிகவும் உதவும்.

* வெள்ளரிப்பிஞ்சை உட்கொண்டால் புகைப்பிடிப்போரின் குடலை நிக்கோடின் தாக்குவதை குறைத்து நஞ்சை நீக்குகிறது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேளை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது.

* நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.

* கண்கள் குளிர்ச்சியடைய வெள்ளரிக்காயை குறுக்கு வசம் சிறியதாக அறுத்து இரண்டு துண்டுகள் எடுத்து கண்ணின் மேற்பகுதியில் சிறிது நேரம் வைத்திடுந்தால் கண் குளிர்ச்சியடையும். அழகிய முகமும் வனப்பும் பெற வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது.

வெள்ளரி பழம் நன்மைகள், vellari pazham benefits in tamil, நீர்ச்சத்து, இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும், சூட்டைத் தடுக்கும் ஆற்றல், பசி அதிகரிக்கும்

Leave a Comment

Scroll to Top