ஆதலினால் காதலித்தாள் 2 – புதிய விடியல்

என் எச்சில் சுரபி தீரும் வரை 
என் பயணம் உன் பின் தொடர்கிறது.
உன் பாதச்சுவட்டு மண் எடுத்து 
என் வீடு போகிறேன்.
என் மனம் அறியும் ஆதலினால் நீ 
என்னைக் காதலிக்கவில்லை ……!

நீ தவறி வீசிய ஒற்றைப்  பார்வை 
எனது என்று என்மனம் பட்டிமன்றம் நடத்தும்.
தீர்ப்பை சாதகமாக்கிகொள்ளும்….!
இது என் காதல் அறிவின் அவசரப்புத்தி.
உன் நிழலைக் கூட வெயில் தொடாமல் 
குடைபிடித்த கதை….!
     உனக்காக பனித்துளிகளை கணக்கிட்டு வைத்த
இந்த பருவக்காரனின் பைத்திய வேகதிற்காக 
நீ என்னை காதலிக்கவில்லை ….!
இது காதலிக்கும் வயது  அல்ல 
சாதிக்கும் வயது  என்று 
அவள் விசையில் இருந்து திசைமாறினேன்
ஆதலினால் 
அந்த ஒற்றைநொடி அவள் காதலித்தாள்
என் கவிதையை…..!

ஆதலினால் காதலித்தாள் என்ற தலைப்பில் கலூரியில் நடந்த கவிதை போட்டியில் எனது கவிதை.

நண்பனின் கவிதை

Leave a Comment

Scroll to Top