நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…! – Healthy Life – புதிய விடியல்
புதிய விடியல்: அன்று 18.04.2015. மதியம் முதலே மாமாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. சரியாக இரவு 10.30 நான் மாமாவின் அருகில் அமர்ந்திருந்தேன். நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். அத்தை சிறிதளவு நீரை மாமாவிற்கு கொடுத்தார். தண்ணீர் உள்ளே இறங்கவில்லை. பாதி நீர் வெளியே வந்தது. பல்லை கடித்து கொண்டார். வாய் கோணலாக மாறியது. மிகவும் சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்த அவரது உடல் அசைவின்றி அமைதியானது.