சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதைகணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்துவந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமேபோதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன்கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலிநிறைந்தது. […]