MY THOUGHTS / 06.11.2018
புதியவிடியல் உதயம்..!
மாற்றத்திற்கான தேடலில் நாம் ஈடுபடும்போது, நம்மை அறியாமலே நமக்குள் நல்ல ரசனைதன்மையும், ஒவ்வொரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகும் விதமும் அதிகரிப்பதையும் உணர முடியும். தினமும் செல்லும் பாதையில் அன்றாடம் பார்த்தவற்றையே மிக உன்னிப்பாக பார்க்க ஆரம்பிப்போம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றையும் அதன் காரண காரியங்களோடு அறிய முற்படுவோம். இதற்கு முன் ஏன் இதை பற்றி நாம் யோசிக்கவில்லை என்று நினைப்போம்.