படித்ததில் பிடித்தது: இங்கே செய்தி தொடர்பு துறை மற்றும் பத்திரிகைகள் ஏன் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன?நமது நாட்டின் பலம், சாதனைகளை பறை சாற்றிக்கொள்ள நாமே தயங்குவது ஏன்?எத்தனை மாபெரும் தேசம் நமது தேசம்? எத்தனை சாதனைக் கதைகள் நம்மில் உருவாகியுள்ளன. அதை ஆமோதிக்க நாம் தயங்குகின்றோம். ஏன்?பால் உற்பத்தியில், தொலைக் கண்காணிப்பு விண்கோள்கள் ஏவுதலில், நாம் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். கோதுமை, அரிசி பயிறிடுதலில் உலகின் இரண்டாமிடத்தை பெற்றுள்ளோம்.டாக்டர் சுதர்சனம் என்பவரைப் பாருங்கள். ஆதிவாசி குடியிருப்புகளை தன்னிறைவு பெற்ற இடங்களாக மாற்றியுள்ளார்! இப்படி எத்தனையோ சாதனைகளுக்கு பதிலாக நமது தகவல் தொடர்புத் துறையினர், எப்போதும் சோக செய்திகள், தோல்விகள், பேரிழப்புகளை வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்! நான் ஒரு நாள் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் காலை செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஊரெங்கும் குண்டு மழை, அழுகைகள், போர் சங்குச் சப்தம். ஆனால், அப்பத்திரிகையின் முதல் பக்கத்திலோ, ஒரு யூதர் அங்கே பாலைவனத்தில், ஐந்தே...