பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் - "அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்"? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.
சித்தரத்தை
சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் - Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.