Home - Puthiya Vidiyal
25
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-25,paged-10,page-paged-10,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-16.9,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
HEALTH & FITNESS / 31.01.2019

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் - "அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்"? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.

சித்தரத்தை

சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் -  Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

SOCIETY / 30.01.2019

புதிய விடியல் : தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமஸ்கிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.

HEALTH & FITNESS / 29.01.2019

நெருஞ்சில் மருத்துவ குணம்: பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் 'கோக்சூரா' - இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி முள் என்றும் பெயர். பூக்கள் மஞ்சள் நிறமாயிருக்கும்.

SOCIETY / 29.01.2019

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!