மழைசோறு – புதிய விடியல்
சாரல் மழை இரு சக்கர வாகனத்தில், கடுமையான வெய்யிலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது திடீரென வானம் கருத்து சில பெரிய துளிகள் முகத்தில் விழும் போது சாரலில் இருந்து தப்பிக்க ஏதாவது கூரையின் கீழ் ஒதுங்கும்போது, நிறைந்த மண் வாசனை இறுகிய மனதுக்கு இதமானதாகவும், சுகமாகவும் இருக்கும். எனது கிராமத்தில் கடந்த காலங்களில் மழையோடு தொடர்புடைய நினைவுகள் வானவில் போல சில நிமிடங்கள் வந்து செல்லும். விவசாயம் இப்பவெல்லாம் ஊர்ல மழை இல்லாமல் நிலம் வரண்டு போய் விவசாயம் பார்த்த தலைமுறை ஓய்ந்து போனது. மழைக்கு மஞ்சள் சோளம் விதைப்பதும் , தென்னந்தோப்பு வளர்ப்பும் தான் இப்ப ஊர்ல விவசாயம். பாண்டியன் குலம் & அந்துவன் குலம் ஆறு இல்லா ஊரு அழகு இல்லை அப்படின்னு ஔவை பாட்டி பாடிட்டு போயிருக்கு. நொய்யல் ஓரமா இருக்கிற எங்க ஊரு அப்ப அழகுதான். செந்தேவி பாளையம் என்று பேர். எழுபது , எண்பது குடும்பம் வாழுற ஒரு சின்ன கிராமம். ஊர்ல பாண்டியன் குலத்தவரும் அதற்கு அடுத்தபடியாக...